×

நெருங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்!: மாவட்ட அலுவலர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை..!!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட அலுவலர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள், முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் அதிகாரி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தலைவர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோருடன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.  27ம் தேதி நடைபெறக்கூடிய வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள், தேர்தல் பணியாளர்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியில் கூடுதல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்குகளை பதிவு செய்வதற்கு 27ம் தேதி அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Erode East Block ,Tamil Nadu ,Chief Election Officer ,Satyaprata Saku , Erode by-election, Satyapratha Saku, consultation
× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல்...